திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேல்பாலத்தின் தடுப்பு சுவர் மீது ஏறி நின்ற நபர் ஒருவர் திடீரென கீழே குதித்தார். இதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த நபரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பூந்தமல்லியில் மேம்பாலத்திலிருந்து குதித்து ஓட்டுநர் தற்கொலை - மேல்பாலம்
திருவள்ளூர்: குடும்ப பிரச்னை காரணமாக ஒட்டுநர் ஒருவர் மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெங்கடேஷ்
இது குறித்து மருத்துவமனை சார்பில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரித்ததில் அந்த நபர் திருமழிசையை சேர்ந்த ஓட்டுநர் வெங்கடேஷ்(37) என்பதும், குடும்ப பிரச்னை காரணமாக மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.