திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பாப்பிரெட்டி பள்ளியில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. அங்குள்ள மக்கள் குடி தண்ணீருக்காக நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், அருகில் உள்ள ஊர் பஞ்சாயத்தில் ஆழ்துளை போர் போட்டு பைப் லைன் மூலம் திருத்தணி முருகன் மலை கோயிலுக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த பைப்பில் ஓட்டை விழுந்துள்ளதால் அதில் சிந்தும் நீரை அங்குள்ள கிராம மக்கள் போட்டி போட்டு ஒருவர் பின் ஒருவராக குடிநீர் எடுத்துச் செல்கின்றனர்.
திருத்தணியில் குடிநீர் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதி! - water scarcity
திருவள்ளூர்: திருத்தணி நகராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், திருத்தணி முருகன் மலை கோயிலுக்கு எடுத்துச் செல்லும் குடிநீர் பைப் லைன் உடைந்ததால் மக்கள் போட்டி போட்டு குடிநீர் எடுத்துச் செல்கின்றனர்.
திருத்தணியில் குடிநீர் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதி!!!!
திருத்தணி நகராட்சியின் குடிநீர் பிரச்னை நிவர்த்தி செய்யக் கோரி நகராட்சி ஆணையரிடம் பலமுறை மனு கொடுத்தும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நகராட்சி நிர்வாகம், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.