திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால், திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் ஊராட்சியிலுள்ள
டி.டி.மருத்துவக் கல்லூரியில் கரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படவுள்ள கரோனா சிகிச்சை மையம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர்: டி.டி.மருத்துவ கல்லூரியில் புதியதாக அமைக்கப்படவுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து இம்மையத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது குடிநீர், கழிவறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, அனைத்து வசதிகளும் உள்ளனவா என்றும், இம்மையத்தில் சுமார் 3000 படுக்கைகள் அமைக்கப்பட்டு, சிகிச்சை மேற்க்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருவதையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், பணிகளை விரைந்து முடிப்பதற்கு அறிவுறித்தினார். இந்த ஆய்வில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) செந்தில், திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.