தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு நீட்டிப்பு - திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை!

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன்
திருத்தணி முருகன்

By

Published : Jul 31, 2021, 3:25 PM IST

திருவள்ளூர்:திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படைகளிலும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை பெருவிழா முன்னிட்டு, அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

திருக்கோயில் வளாகத்தில் தெப்ப உற்சவம் தொடர்பான நிகழ்வுகள் பக்தர்களின்றி சென்றாண்டு நடைப்பெற்றதைப்போல் இந்தாண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பொது மக்கள் யாரும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தர வேண்டாம் என, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகஸ்ட் 2 முதல் 4 ஆம் தேதி வரை திருக்கோயில் மலைக்கோயிலில் 3ஆம் பிரகாரத்தில் நடைபெறும் தெப்ப உற்சவ நிகழ்வுகளை இணைய தளத்திலும், யூடியுப் சேனலிலும் நேரடியாக மாலை 5 மணியளவில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:ஊரடங்கு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details