தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புழல் சிறையில் துணை ஆணையர் தலைமையில் திடீர் ஆய்வு - Puzhal central prison

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் கஞ்சா புழக்கத்தில் இருப்பதாகப் புகார் எழுந்ததையடுத்து துணை ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

புழல் மத்திய சிறை
புழல் மத்திய சிறை

By

Published : Aug 7, 2021, 6:57 AM IST

திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் உள்ள கஞ்சா, குட்கா, பான் மசாலா, போன்ற போதைப்பொருள்கள், கைப்பேசி ஆகியவை பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாதவரம் துணை ஆணையர் சுந்தரவனம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் நேற்று (ஆக. 6) அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வில் போதைப் பொருள்களும், கைப்பேசி போன்றவை பறிமுதல்செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பும் முழு விவரமும்!

ABOUT THE AUTHOR

...view details