நாட்டின் பாதுகாப்பிற்காக முப்படை வீரர்களோடு இணைந்து நாடெங்கும் 41 பாதுகாப்பு தொழிற்சாலையில் 82 ஆயிரம் தொழிலாளர்கள் முப்படைகளுக்கு தேவையான டாங்கிகள், பீரங்கிகள், துப்பாக்கிகள், வாகனங்களுக்கு தேவையான எஞ்சின்கள் என 650க்கும் மேற்பட்ட தளவாடங்களை உற்பத்தி செய்கிறார்கள். இதில் மிகவும் முக்கியமான 275 ராணுவ தளவாடங்களை இனிமேல் பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்ய வேண்டாம் என்று அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாக, ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த முடிவை எதிர்த்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
திருவள்ளூர்: ஆவடியில் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
workers strike
இந்நிலையில் மத்தியில் மீண்டும் பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையிலான அரசு, 100 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டிய திட்டங்களில் 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளையும் கார்ப்பரேசனாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து ஆவடியில் உள்ள ஆறு தொழிற்சாலையின் ஊழியர்கள், தங்களது குடும்பத்தினரோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.