திருவள்ளூர் மாவட்டம், பூண்டியை அடுத்த சென்றான்பாளையம், நெல்வாயில் ஆகிய கிராமங்களில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 98ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதராஸ் அண்ட் தொண்டு நிறுவன அறக்கட்டளை மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து, வைரஸ் தொற்றால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் 350 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
’முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற 30 நாள்களில் கட்டுக்குள் வந்த கரோனா’ - அமைச்சர் பெருமிதம் - திருவள்ளூர் செய்திகள்
திருவள்ளூர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 30 நாள்களில் வைரஸ் தொற்று பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் நாசர், நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் வைரஸ் தொற்றை தடுக்காத காரணத்தால்தான் தொற்று பாதிப்பு அதிகரித்தது என்றும், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 30 நாள்களில் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சகாயராஜ், தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரான்சிஸ் சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.