திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார்(23) பிறந்த நாள் விழாவை, நடுரோட்டில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி, பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடியது தெரியவந்தது.
இதனையடுத்து, பட்டாக்கத்தியால் கேக் வெட்டும்போது, உடனிருந்த கல்லூரி மாணவன் நரேன், அஜித் குமார், கலைவாணன், விஜய், பாலாஜி உள்ளிட்ட ஐந்து பேர் மீது புல்லரம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் இதில் அஜித்குமார், கலைவாணன் ஆகிய இரண்டு பேரும் பொது இடத்தில் வழிமறித்து ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற மூன்று பேரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது