தமிழ்நாட்டிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: மருத்துவர்களுடன் வாக்குவாதம் - அரசு தலைமை மருத்துவமனை கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இல்லாததால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர்கள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
இந்நிலையில், திருவள்ளுர் அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை கரோனா தடுப்பூசி செலுத்த ஏராளமானோர் சென்றனர். ஆனால் தடுப்பூசி இல்லாததால், மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை விளக்குமாறு மருத்துவர்களிடம் கோரினர்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - உண்மை நிலவரம் என்ன?