இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவரையும் விமான நிலையத்தில் தீவிரமாகப் பரிசோதித்த பின்னரே வெளியே அனுப்பப்படுகின்றனர்.
திருவள்ளூரில் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த அருண், சவுதி அரேபியாவிலிருந்து மூன்று நாள்களுக்கு முன் தனது திருமணத்திற்காக சொந்த ஊர் வருகைதந்துள்ளார். இந்நிலையில் நேற்று, திடீரென்று அவருக்குக் காய்ச்சல், இருமல், சளி ஏற்படவே திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.