இந்தியா முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முடங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்கும் வகையில் பூவிருந்தவல்லி நகராட்சியில் 24 மணிநேரமும் செயல்படும் "கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாட்டு அறை" தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கான எண்களை பூவிருந்தவல்லி நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 044-26272710, 9677142672ஆகிய இரண்டு எண்ணிற்குத் தொடர்பு கொண்டு கரோனா குறித்த சந்தேகங்கள், தங்கள் பகுதியில் சந்தேகிக்கப்படும் வகையில் அறிகுறியுடன் யாரேனும் இருப்பின் அவர்கள் குறித்த புகார் தெரிவிக்கலாம்.