தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 38 இடங்களுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் தொகுதியில் அதிமுக சார்பில் வேணுகோபால், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஜெயக்குமார், நாம் தமிழர் சார்பில் வெற்றி செல்வி ஆகியோர் களமிறங்கினர்.
திருவள்ளூரில் திருப்பத்தை ஏற்படுத்திய காங்கிரஸ்! - thiruvallure constituency
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வேணுபாலை பின்னுக்கு தள்ளி 2 லட்சம் வாக்குகள் வித்திசாயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜெயக்குமார்
இந்த தொகுதியில் பதிவான வாக்குக்களை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்றது. துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் முன்னிலை பெற்று வந்தார்.
அதன்பின், அனைத்து சுற்றுகளும் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை பின்னுக்கு தள்ளி 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்திசாயத்தில் வெற்றி வாகை சூடினார்.