தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தகராறு காரணமாக இரு தரப்பினரிடையே மோதல்! - நிலத்தகராறு

திருவள்ளூர் : திருவூர் அருகே நிலத்தகராறு காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conflict between the two sides due to land conflict
Conflict between the two sides due to land conflict

By

Published : May 29, 2020, 10:26 PM IST

திருவள்ளூர் அடுத்த திருவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது மகள் பரமேஸ்வரி மற்றும் மருமகன் வாசுதேவனுடன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது வீட்டு அருகில் அன்பழகன் - சாந்தி தம்பதியினர் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஆறுமுகத்திற்கு சொந்தமான இடத்தில் மூன்று அடி இடம் விட்டு வீட்டை கட்டியுள்ளனர். அந்த இடத்தில் அன்பழகன் குடும்பத்தினர் குப்பைகளை கொட்டுவதால் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு.

இதனால் தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஆறுமுகம் தரப்பில் கேட் அமைத்துள்ளனர். இதனால் அன்பழகன் தரப்பினர் கடந்த வாரம் வாசுதேவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வாசுதேவன் நேற்று (மே 28) மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

இதையறிந்த அன்பழகன் தனது நண்பர்கள் சண்முகம், சதீஷ், சரவணன், சந்தோஷ் உள்ளிட்டோருடன் கத்தி மற்றும் இரும்பி கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களுடன், ஆறுமுகம் மற்றும் வாசுதேவன், பரமேஸ்வரி அவர்களின் மகன் தினகரன் உள்ளிட்டோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நான்கு பேரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகம் செவ்வாப்பேட்டை காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அன்பழகன் மற்றும் அவர்களது நண்பர்களை வலைவீசி தேடிவருகின்றனர். நிலத்தகராறில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details