மீஞ்சூர் ரமணா நகர் பகுதியில் வசிப்பவர் தெய்வானை. இவர் தன் குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்குச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர். உடனே அவர் கூச்சலிட்டுக் கத்த ஆரம்பித்ததையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த இரு நபர்களையும் மடக்கிப் பிடித்து கையை கட்டிப் போட்டனர்.
சங்கிலியைப் பறித்த மாணவர்கள்; தர்ம அடி கொடுத்த மக்கள்! - மீஞ்சூர்
திருவள்ளூர்: சாலையில் நடந்துச் சென்ற பெண்ணின் சங்கிலியைப் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்களை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, மீஞ்சூர் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டுக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(18), பிரசாந்த் (18) என்பது தெரியவந்தது. இவர்கள் சென்னையில் உள்ள தியாகராஜா கல்லூரியில் படித்து வருவதாகவும் செலவிற்குப் பணம் இல்லாதபோது இது போன்ற வழிப்பறிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை அடிக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.