சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் கரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோயம்பேடு வணிக வளாகத்திற்கு சென்று வந்த வியாபாரிகள், தொழிலாளர்கள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பரவி வருவதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோயம்பேடு சந்தை தற்காலிகமாக, திருவள்ளூர் மாவட்டம் - திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைய உள்ள இடத்திற்கு மாற்றப்படும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.
இதனடிப்படையில் கடந்த 11ஆம் தேதி முதல் அங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் நாகராஜ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்ட குழுவினர் வணிக வளாகங்களை ஆய்வு செய்தனர்.