திருவள்ளூர் அருகே உள்ள செங்குன்றம் அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மாணவச் செல்வங்களே... மரம் நடுவீர்! 100 மரங்கள் நட்டுவைத்த ஆட்சியர்! - மரம்வளர்ப்பது
திருவள்ளூர்: 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார், மரம் வளர்ப்பது குறித்த அவசியம் பற்றி மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
செங்குன்றம் அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார்
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புழல் ஏரிக்கரையின் எதிரே மரக்கன்றுகளை நடவைத்து பராமரிக்க நாரவாரிக்குப்பம் செயல்அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.