திருவள்ளூர் மாவட்டம் நாராயணபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா சிகிச்சை முகாமாக செயல்பட்டு வருகிறது.
அதற்காக அங்கு துப்புரவு பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக நாளுக்கு 500 ரூபாய் ஊதியத்திற்கு தூய்மைப் பணியாளர்களை நியமிக்கப்பட்டனர்.
தன்னலம் கருதாமல் உழைத்த அவர்களுக்கு இன்று வரையிலும் ஊதியம் வழங்கவில்லை. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இன்று தூய்மை பணியாளர்கள் கடும் மழையில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தங்களுக்கு உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.