திரைப்பட நடிகர் ஜெயராமன் 2010ஆம் ஆண்டு தமிழ் பெண்களை பற்றி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்து, வளசரவாக்கம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் சீமான் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சீமான் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி - seeman
திருவள்ளூர்: 2010ஆம் ஆண்டு நடிகர் ஜெயராமன் வீடு தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சீமான் உள்ளிட்ட 17 பேர் விடுவிக்கப்பட்டனர்.
திருவள்ளூரில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒன்பது ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில், இன்று மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததை தொடர்ந்து 17 பேரையும் நீதிபதி வழக்கிலிருந்து விடுதலை செய்தார்.
இதையடுத்து, வளாகத்துக்கு வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்; "என் மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடங்கப்பட்டதாகும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது எனக் கூறினார். பின்னர், மத்திய அரசு குளங்களை தூர்வார ஒதுக்கிய பணம் போதுமானதாக இல்லை கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெறும்" என தெரிவித்தார்.