தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்கொடுமை : முதியவருக்கு  தண்டனை - பாலியல் பலாத்காரம்

திருவள்ளூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

By

Published : Apr 16, 2019, 11:19 AM IST

திருவள்ளூர் மாவட்டம் மதுரைபுறம் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தையா. இவர் அதே பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகரின் அடிப்படையில் சித்தையாவை காவல்துறையினர் கைது செய்தனர். பின் இந்த வழக்கானது திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு நான்கு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து சித்தையா சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details