தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 9, 2020, 8:55 PM IST

ETV Bharat / state

திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் முதலமைச்சர் ஆய்வு!

திருவள்ளூர்: தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ள திருமழிசை காய்கறி சந்தையை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

chief minister inspects Thirumazhisai vegetable market
chief minister inspects Thirumazhisai vegetable market

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகளுக்கு, கரோனா வைரஸ் தொற்றுப் பரவியதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை தற்காலிமாக மூடப்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்குக் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமையவுள்ள இடத்தில் தற்காலிகமாக கோயம்பேடு காய்கறி சந்தை மாற்றப்படுவதாக சந்தை நிர்வாகம் அறிவித்தது. அதனடிப்படையில், திருமழிசையில் கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், வரும் 10ஆம் தேதி வணிக வளாகம் திறக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருமழிசையில் கடைகள் அமைக்கும் பணியை ஆய்வு செய்தனர். இங்கு 120 ஏக்கர் பரப்பளவில் இடம் சீரமைக்கப்பட்டு, முதல் கட்டமாக இப்பகுதியில் 200 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருமழிசை காய்கறி சந்தையை ஆய்வு செய்ய வருகை தந்த முதலமைச்சர்!

குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்குத் தேவையான வசதிகள் குறித்தும் மொத்த கடைகள் பரப்பளவு குறித்தும், அலுவலர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க:வேலை நேரத்தை அதிகரிப்பதால் யாருக்கும் பலனில்லை : கர்நாடக அரசு

ABOUT THE AUTHOR

...view details