திருவள்ளூர்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி இன்று திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். கரோனா காலத்தில் நடத்தப்பட்டுவரும் வழக்கு பணிகள் தொடர்பாக நீதிபதிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
அதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தலைமை நீதிபதியிடம், நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர் நீதிமன்றம், வங்கி, அஞ்சல் நிலைய அலுவலகம், கேண்டீன் போன்ற வசதிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தனர்.