தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டு வாடகை பிரச்னையால் ஒருவர் தீக்குளிப்பு: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

திருவள்ளூர்: வீட்டு வாடகை பிரச்னை காரணமாக ஒருவர் தீக்குளித்த சம்பத்தில், புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

chennai-police-inspector-ben-sam-suspended-in-connection-with-a-suicide
chennai-police-inspector-ben-sam-suspended-in-connection-with-a-suicide

By

Published : Aug 2, 2020, 4:16 PM IST

திருவள்ளூர் மாவட்டம் சென்னை புழல் அடுத்த விநாயக புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான வீட்டில், ஊட்டி ஏரியை சேர்ந்த பெயிண்டர் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் கோரியும், சீனிவாசன் மறுத்ததால் காவல் துறையினரிடம் புகாரளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று (ஆகஸ்ட் 1) மாலை புழல் காவல் ஆய்வாளர் பென் சாம், சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சீனிவாசன், மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சீனிவாசனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயன்ற சீனிவாசன் 85 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே வீட்டு உரிமையாளர் காவல் துறையினரை அழைத்து வந்து தம்மை அடித்ததால் தற்கொலை செய்து கொல்ல முயற்சித்தேன் என சீனிவாசன் வாக்குமூலம் அளித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே சீனிவாசன் வீட்டிற்கு வாடகை தராததாலும், மதுபோதையில் வந்து தகராறு செய்து வருவதாலும் தான் ஜனவரி மாதம் முதலே அவரை வீட்டை விட்டு காலி செய்ய கூறினேன். ஆனால் அவர் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேற மறுத்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் என வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் தரப்பில் கூறப்படுகிறது.

தற்கொலை செய்த சீனிவாசன் வாக்குமூலம் வீடியோ

வீட்டை காலி செய்யக்கோரி அளித்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதால் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வீட்டு வாடகை பிரச்னையில் சீனிவாசன் தீக்குளித்த சம்பவத்திற்காக புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீனிவாசன் வாக்குமூலம் அளித்த நிலையில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கள்ளச்சாவி போட்டு பைக் திருடிய மூவருக்கு போலீஸ் வலைவீச்சு - வெளியான சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details