தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணிடம் 4 சவரன் நகை பறிப்பு - பைக்கில் வந்த கொள்ளையர்களின் அட்டகாசம் - chain robbery

திருத்தணியில் நடந்து சென்ற பெண்ணிடம் நான்கு சவரன் நகையை பைக்கில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

சிசிடிவி கேமரா  செயின் பறிப்பு  கொள்ளை  திருட்டு  நகை பறிப்பு  வழிபறி  திருத்தணியில் பெண்ணிடம் நகை பறிப்பு  திருவள்ளூர் செய்திகள்  thiruvallur news  thiruvallur latest news  chain snatching  robbery  chain robbery  chain snatching case
chain snatching

By

Published : Oct 24, 2021, 9:55 AM IST

திருவள்ளூர்:திருத்தணி கேசிசி பேங்க் தெருவில் வசிப்பவர் சரவணன். இவர் சென்னையில் அரசு போக்குவரத்து கழக நடத்துனராக பணிபுரிகிறார்.

இவரது மனைவி பாரதி (48), நேற்று (அக்.23) திருத்தணி அக்கையநாயுடு சாலையிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்திருந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பாரதி கழுத்திலிருந்த நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனை; நண்பரைக் கொலை செய்த 4 பேர் சரண்!

ABOUT THE AUTHOR

...view details