தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏரிகளில் கழிவுநீர் வெளியேற்றினால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை - கழிவுநீர்

திருவள்ளூர்: ஏரிகளில் கழிவுநீர் வெளியேற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பெஞ்ஜமின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By

Published : Mar 7, 2019, 11:46 PM IST

பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.28 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அமைச்சர்

இதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்ஜமின் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்நாட்டினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெஞ்ஜமின், "பூந்தமல்லி, கோலடி, அயனம்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் வெளியேற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details