தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டு கொண்டாட்டம்: விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு! - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்களை மீறியதாக 262 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

Violation of government rules
Violation of government rules

By

Published : Jan 1, 2021, 6:10 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிகளை மீறியதற்காக இருசக்கர வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு, அதில் பயணம்செய்தவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், மூன்று பேர் பயணித்தல் உள்ளிட்ட அத்துமீறல்களால் 741 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 262 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

இதையும் படிங்க: சாதி மனிதனை சாக்கடையாக்கும்: ஆந்திராவில் ஆணவக் கொலை...

ABOUT THE AUTHOR

...view details