தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல்: இருவர் கைது - கஞ்சா கடத்தல்

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அரசுப் பேருந்து மூலம் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்த இருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tiruvallur
Tiruvallur

By

Published : Jan 17, 2021, 10:21 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சாவடியில் ஆரம்பாக்கம் காவல் துறையினர் இரவு, பகலாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஜன.16) ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து சென்னைக்கு வரும் அரசுப் பேருந்தில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வருவதாக ஆரம்பாக்கம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, பேருந்தில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வரப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கஞ்சா கடத்திவந்த தேவாரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (49), மதுரையைச் சேர்ந்த ஒச்சியப்பன் (48) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், குற்றவாளிகளை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இரண்டு பேர் சிறையில் அடைப்பு

ABOUT THE AUTHOR

...view details