தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’சி.ஏ.ஏ. குடியுரிமையை பறிக்கும் சட்டமல்ல; குடியுரிமையை வழங்கும் சட்டம்’ - அமைச்சர் விளக்கம் - Citizenship Amendment Act

திருவள்ளூர்: குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை பறிக்கும் சட்டமல்ல, குடியுரிமையை வழங்கும் சட்டம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

caa
caa

By

Published : Jan 25, 2020, 1:35 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா என்பது சிறுபான்மையினர் யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தேவையில்லாத பயத்தை மக்களிடம் உருவாக்கி வருகிறார் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது யாருக்கும் குடியுரிமையை பறிக்கக் கூடியது அல்ல; குடியுரிமை வழங்குவது மட்டுமே. சிறுபான்மையினர் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாத வகையில் மாநில அரசு பாதுகாக்கும் என்று தெரிவித்தார்.

அமைச்சர், மாஃபா பாண்டியராஜன்

தொடர்ந்து பேசிய அவர், 5ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது என்ன மாதிரியான தேர்வு என்று பார்க்க வேண்டும். அரசுப்பள்ளியில் இதுபோன்ற தேர்வுகள் நடத்தப்படுவது பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தொடர்ந்து இதுபோன்ற தேர்வுகள் வைப்பதினால் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details