திருத்தணி வட்டத்தில் மணல் கடத்தல் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. காவல்துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு, மணல் கடத்தலைத் தடுத்து வந்தாலும், மணல் கடத்தல் இன்றளவும் ஓயவில்லை. மணல் தட்டுப்பாடு அதிகம் ஏற்படுவதால் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாட்டு வண்டி மூலம் கொசஸ்தலை ஆற்றில் ஆங்காங்கே திருட்டு மணல் எடுக்கப்பட்டு, மறைமுகமாக விற்பனை நடந்து வருகிறது. இத்தகவலைக் கொண்டு ஆய்வு செய்த தனிப்படை, ஒரு மாட்டு வண்டி மாதத்திற்கு ரூ.4000 வாடகைக்கு செல்வதாக்கத் தகவல் கிடைத்தது.
மணல் கடத்திய 11 மாட்டு வண்டிகள் பறிமுதல்! - bullock seized
திருவள்ளூர்: திருவலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய பதினோரு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணல் கடத்திய 11 மாட்டு வண்டிகள் பறிமுதல்!
ஒரு மாட்டு வண்டிக்குக் காவல்நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ.700 கொடுத்துவிட்டு மணல் கடத்துவதாகத் தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குச் சென்று, ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் தப்பியோடி நிலையில், 3 பேரைத் துரத்திப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.