சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் புகழ்பெற்ற புத்தர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி திருநாள் புத்தபூர்ணிமா திருநாளாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி 2563ஆம் ஆண்டு புத்த பூர்ணிமா விழா இங்கு சிறப்பாக நடைபெற்றது.
சித்திரை முழு நிலவு: புத்த பூர்ணிமா விழா கொண்டாட்டம் - full moon
திருவள்ளூர்: சித்திரை முழு நிலவு திருநாளையெட்டி செங்குன்றம் புத்தர் கோயிலில் புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது.
File pic
முன்னதாக பக்தர்கள் பழ வகைகள் கொண்ட சீர்வரிசை கொண்டுவந்து போதி மரத்தடியில் வைத்து அம்மரத்திற்கு நீரூற்றி வழிபட்டனர். பின்னர் 12 அடி உடைய புத்தர் சிலைக்கு மலர்தூவி தீபங்கள் ஏற்றி சிலையை சுற்றி வலம்வந்து புத்தரை வழிபட்டனர்.
மேலும் இவ்விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் புத்தமதத்தின் போதனைகளை ஆலய புத்தபிட்சுக்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர். இதில் ஏராளமான புத்தமத பக்தர்கள் கலந்து கொண்டனர்.