சென்னை கொளத்தூர் ரெட்டேரி சிக்னல் அருகே யூனியன் வங்கி அருகே ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே அந்த நபர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜமங்கலம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கொலையானவர் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பாட்ஷா (31) என்பது தெரியவந்தது.