அதிமுக கூட்டணியில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரின் மகள் கே.எஸ்.வி.சஞ்சனா தலைமையிலான 100க்கும் மேற்பட்டோர், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.