திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிசை சந்தித்து முன்னாள் அதிமுக அமைச்சர் அப்துல் ரஹீம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று (ஜூலை 4) மனு அளித்தனர்.
அந்த மனுவில், 'ஆவடி மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் எவ்வித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை எனவும் மாநகராட்சியில் சாலை வசதிகள் குடிநீர் வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான அரசு கட்டடத்தை தற்போதைய அமைச்சரின் மகன், கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார். அதன்படி, கடந்த ஜூன் 24ஆம் தேதி திமுக தொழில்நுட்ப பிரிவு பணிகளுக்காக அக்கட்டடத்தில் கூட்டம் நடத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினர் மனு எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும், நகராட்சியில் மேற்கொள்ள பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்' என்றும் கூறப்பட்டிருந்தது. அதன் பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகி கே சுல்தான், 'ஆவடி மாநகராட்சியில் மகனும் 4-வது வார்டு உறுப்பினர் அரசு கட்டடத்தை கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார்.
மேலும், அமைச்சர் தொகுதியாக இருந்தும் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என மனு அளித்துள்ளோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், வரும் 11ஆம் தேதி ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்' என்றார்.
இதையும் படிங்க: ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக ஆகலாம்.. ஆனால் ஒரு ஆலயத்தின் அர்ச்சகராக ஆக முடியாது - திருச்சி சிவா