தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்.. பீதியில் பயணிகள் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

திருத்தணியில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்களின் ஆபத்தான இந்தப் பயணத்தால், பயணிகள் பீதியடைந்துள்ளனர்.

பீதியில் பயணிகள்
பீதியில் பயணிகள்

By

Published : Dec 9, 2021, 2:02 PM IST

திருவள்ளூர்:திருத்தணி பகுதியிலிருந்து புச்சிரெட்டிப்பள்ளி, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பேருந்துகளில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்‌.

சமீபகாலமாகப் பள்ளி மாணவர்கள் கெத்து என்று கூறிக்கொண்டு பேருந்துகளில் சாகச பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் கூட்டமாகப் பேருந்து படிக்கட்டுகளில் கொத்து கொத்தாகத் தொங்கியபடியும், பக்கவாட்டில் இரும்பு கம்பியைத் தாங்கி பிடித்துக் கொண்டும் சாலையை காலணியால் உரசியபடி பயணம் செய்கின்றனர்.

படியில் பயணம் நொடியில் மரணம்

இந்த நிலையில் படியில் பயணம் நொடியில் மரணம் என்பதைக் குறித்து ஆசிரியர்கள் பெற்றோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதனைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மற்றவர்கள் பார்த்து வியக்க வேண்டும் என்பதற்காகவே, சில மாணவர்கள் பேருந்துகளில் மேற்கொண்டு வரும் பயணித்தால் ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும், பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது‌.

ஓடும் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சாகச பயணம்

மாணவர்களின் சாகச பயணத்தால் பேருந்தை இயக்க ஓட்டுநர்கள் அச்சமடைந்து வரும் அதே நேரத்தில் பேருந்து பயணிகளும் பீதியுடன் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பெரும் விபத்து ஏற்படும் முன் பள்ளி நேரங்களில் திருத்தணியிலிருந்து, பொதட்டூர்பேட்டை மார்க்கத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்றும், குறிப்பாகக் காவல் துறையினர் மாணவர்களின் பேருந்து பயணத்தைக் கண்காணித்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:விவசாயி மகன்.. 18 வயதில் ராணுவ பணி.. விபத்துக்கு முன் மனைவியிடம் வீடியோ கால்... உருக்கமான கடைசி நிமிடங்கள்!

ABOUT THE AUTHOR

...view details