திருவள்ளூர்: கடம்பத்தூர் ஊராட்சிக்குள்பட்ட வெண்மனம்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளி சேதமடைந்து காணப்பட்டது. அத்தகைய கட்டடத்தை இடிப்பதற்கு வட்டார வளர்ச்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு இடிப்பதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது.
தீர்மானம் இயற்றப்பட்டு இடிக்க வேண்டிய கட்டடத்திற்குப் பதிலாக, அருகிலிருந்த மாற்று பள்ளிக் கட்டடத்தை கடம்பத்தூர் இரண்டாவது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் என்பவர் ஜேசிபி இயந்திரம் கொண்டு கடந்த டிசம்பர் 9ஆம் தேதி இடித்துத் தள்ளினார்.