தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக வேட்பாளர்களை மிரட்டும் திமுக நிர்வாகி - காவல் நிலையத்தில் புகார் - அதிமுக வேட்பாளர்களை மிரட்டும் திமுக நிர்வாகி

திருநின்றவூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை திமுக நிர்வாகி மிரட்டுவதாகக் கூறி அதிமுகவினர் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்த அதிமுக
ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்த அதிமுக

By

Published : Feb 8, 2022, 4:02 PM IST

சென்னை:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள் உள்பட 9 கட்சிகள் போட்டியிடுகின்றன. திமுக 20 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இதேபோன்று அதிமுக 27 இடங்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் 14ஆவது வார்டில் திமுக சார்பில் வை.ரவி என்பவரும்; அதிமுக சார்பில் அருணாசலம் என்பவரும் வேட்புமனு அளித்திருந்தனர்.

இந்தநிலையில் அதிமுக முன்னாள் ஊரகத்தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் அம்பத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அலெக்ஸ்சாண்டர் தலைமையில் திருநின்றவூரில் அதிமுக வேட்பாளர்கள் ஒட்டுமொத்தமாக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்தப்புகார் மனுவில் திமுக நகரப் பொறுப்பாளராக இருக்கும் ரவி என்பவர், அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், பரப்புரைக்குச் செல்லவிடாமல் அச்சுறுத்துவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், திருநின்றவூர் காவல் துறை ஆய்வாளர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்த அதிமுக

திமுகவினர் அதிமுகவினரை மிரட்டி வாபஸ் வாங்க வைத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வேளாண் சட்டம்போல நீட் சட்டமும் திரும்பப் பெறப்படும் - அழகிரி நம்பிக்கை

ABOUT THE AUTHOR

...view details