தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் நடிகர் விஷால் - Actor Vishal Married

திருவள்ளூரில் 11 ஜோடிகளுக்கு நடிகர் விஷால் திருமணம் செய்து வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 6, 2022, 10:36 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவ.6) நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் பட்டு வேஷ்டி, பட்டு சேலையுடன் சீர்வரிசையோடு 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார். இந்த விழாவில் அவர் பேசுகையில், 'எனக்கு பட்டு வேஷ்டி சட்டை அணிவது மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அது பயன்படும். பல மாதங்களுக்குப் பிறகு இன்று எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிகிச்சைக்காக கேரளா சென்று வந்தேன். பின்பு இந்த தேதியை தேர்ந்தெடுத்த முடிவு செய்தோம். இன்று என் குடும்பம் பெரிதாகிவிட்டது. எனக்கு 11 தங்கைகள் கிடைத்திருக்கிறார்கள்.

தங்கை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்களை நான் எனது உடன்பிறந்த தங்கைகள் போலவே பார்க்கிறேன். ஆகவே, மாப்பிள்ளைகள் அனைவரும் என்னை வேட்டியை மடித்துக் கட்ட வைத்து விடாதீர்கள். இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம், போனோம் என்று இல்லாமல் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பேன். என் தங்கைகளிடம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். அதற்கு மாப்பிளைகளாகிய நீங்கள் தான் முழு பொறுப்பு. என் தங்கைகளை நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த 11 தம்பதிகளின் குழந்தைகளுடைய கல்வி செலவு மற்றும் எதிர்காலத்தை தேவி அறக்கட்டளை பார்த்துக் கொள்ளும். அதற்காக நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம். அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்கள் அனைவரின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தால், நான் தானாகவே மகிழ்ச்சி அடைவேன். மக்கள் நல இயக்கம் தொடங்கியதற்கு ஒரே ஒரு விஷயத்திற்காக தான். இந்த நோக்கமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த சமுதாயத்திற்கு இறங்கி வேலை செய்து நல்லது செய்ய வேண்டும். யார் இந்த மனநிலையில் இருக்கிறீர்களோ அவர்கள் என்னுடன் வாருங்கள்.

இங்கு ஒரு அம்மா என்னிடம், 11 பேருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறாய். நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? என்று கேட்டார்கள். ஒரு வார்த்தை சொன்னால் அதில் நிற்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். கடவுளை நம்புகிறேன், உங்களை நம்புகிறேன், இந்த பூமியை நம்புகிறேன், அடுத்த வருடம் எத்தனை தடைகள் வந்தாலும், மனது சுத்தமாக இருந்தால். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக தீர்ப்பு வரும், அதுவும் நல்ல தீர்ப்பு வரும்.

அதுக்காக சங்கத்தின் கட்டட பணிகளை தொடங்கி இருக்கிறோம். இடம் பற்றாக்குறையாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் வரவேண்டும். ஒவ்வொரு வருடமும் அனைவரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சுமார் 3,500 நாடக நடிகர் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சங்கத்தினர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘நாயகன் மீண்டும் வர்றான்’ - 35 வருடத்திற்கு பின் மணிரத்னத்துடன் இணையும் கமல் ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details