திருவள்ளூர்:கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்ததைத்தொடர்ந்து தஞ்சையிலும் ஷவர்மா சாப்பிட்டு மூன்று மாணவர்கள் மயக்கமடைந்ததால் தமிழ்நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஷவர்மா கடைகள், சிக்கன் கடைகளில் இறைச்சி தரமற்ற முறையில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், மணவாளநகர் உள்ளிட்ட இடங்களில் ஷவர்மா கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் கடந்த 3 நாள்களாக 60க்கும் மேற்பட்ட கடைகளில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.