தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

திருவள்ளூர் அருகே தனியார் கார் தொழிற்சாலையில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே தனியார் கார் தொழிற்சாலையில் ஊழியர்கள் 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

By

Published : May 8, 2019, 10:58 PM IST

Updated : May 8, 2019, 11:31 PM IST

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரில் கடந்த 22 ஆண்டுகளாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற சென்னை கார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு லான்ஸர் சிடியா உள்ளிட்ட கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

260 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் முன்னிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான பிஜோ வீடியோ என்ற நிறுவனத்திற்கும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது

அதன்படி ஆலையில் இருந்து ஊழியர்களையும் பணிக்கு எடுத்துக் கொள்வதாக கூறி இருந்த நிலையில் தற்போது தொழிலாளர்களை பணிக்கு வர வேண்டாம் என்று கூறியதுடன் கடந்த மூன்று மாதங்களாக தொழிற்சாலையில் உற்பத்தி ஏதும் நடைபெறாமல் பராமரிப்பு பணிகளை மட்டும் மேற்கொண்டு வருகின்றது. சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஆலையில் தற்போது உற்பத்தி ஏதும் நடைபெறாத நிலையில் தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆறாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Last Updated : May 8, 2019, 11:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details