திருவள்ளூர்: திருத்தணி அருகே அகூர் காலனி கிராமத்தைச்சேர்ந்தவர், கூலித்தொழிலாளி ரவிக்குமார். இவரது மகன் சக்திவேல். இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர் கைது - Hemp plants at home
திருத்தணி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞரை காவல்துறை கைது செய்தனர்.
Etv Bharat
இந்நிலையில், இவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அகூர் காலனி கிராமத்திற்குச்சென்ற போலீசார் சக்திவேல் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, கஞ்சா செடி வளர்ப்பதை உறுதி செய்த காவல் துறை, கஞ்சா செடியைப் பறிமுதல் செய்து, இதனை வளர்த்த சக்திவேல் என்னும் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
இதையும் படிங்க:அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயம்