தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை இல்லாத விரக்தியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை! - திருவள்ளுரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: திருமணமாகி மூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லாத விரக்தியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

A young women commits suicide by hanging in despair of not having a child  A young women commits suicide  A young women commits suicide in thiruvallur  குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை  திருவள்ளுரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை  இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
A young women commits suicide in thiruvallur

By

Published : Feb 18, 2021, 10:47 PM IST

திருவள்ளூர் மாவட்டம், தாம்பரபாக்கம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்வரின் மகள் பானுப்பிரியா(26). இவருக்கும் காந்தி நகரைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு பானுப்பிரியா, தன் கணவருடன் தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கேயே இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், விரக்தியில் இருந்து வந்த பானுப்பிரியா இன்று (பிப்.18) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த வெங்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பானுப்பிரியாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்!

ABOUT THE AUTHOR

...view details