தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக்கை லாவகமாக திருடிய டிப்டாப் திருடன் - சிசிடிவியைக்கொண்டு போலீஸார் விசாரனை - திருவள்ளூர் பகுதியில் பிரபல யாஸ்மின் துணிக்கடை

திருவள்ளூர் மாவட்டத்தில் கடை ஒன்றின் முன் நிறுத்தப்பட்ட பைக்கை ஒருவர் அலேக்காக திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

Etv Bharatபைக்கை லாவகமாக திருடிய டிப்டாப் திருடன் - சிசிடிவி கொண்டு போலீஸார் தீவிர விசாரனை
Etv Bharatபைக்கை லாவகமாக திருடிய டிப்டாப் திருடன் - சிசிடிவி கொண்டு போலீஸார் தீவிர விசாரனை

By

Published : Nov 8, 2022, 7:39 PM IST

திருவள்ளூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் நம்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த அருள் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ( பதிவு எண்:டிஎன் 20 டிஏ554) பல்சர் இருசக்கர வாகனத்தில் புத்தாடை வாங்குவதற்காக வந்து, துணிக்கடையின் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு புத்தாடை எடுக்கச்சென்றுள்ளார். பின்னர் புத்தாடை வாங்கிக்கொண்டு வெளியே வந்து பார்த்த அருள், தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து தனது இருசக்கர வாகனத்தை துணிக்கடை அருகே தேடியும் கிடைக்காததால், துணிக்கடையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தபோது கறுப்பு நிற பேண்ட், சிவப்பு நிறச்சட்டை அணிந்து டிப்டாப்பாக வந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

பைக்கை லாவகமாக திருடிய டிப்டாப் திருடன் - சிசிடிவியைக்கொண்டு போலீஸார் விசாரனை

தனது வாகனம் திருடு போன சம்பவம் குறித்து அருள் அளித்தப் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர போலீசார் டிப்டாப் திருடன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருவள்ளூரின் மையப் பகுதியாக திகழும் மக்கள் அதிகம் கூடும் பகுதியான திருவள்ளூர் தேரடியில் அமைந்துள்ள துணிக்கடை அருகே பைக் திருடு போன சம்பவம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிரியாணி சண்டை: மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவனை கட்டிப்பிடித்த மனைவி!

ABOUT THE AUTHOR

...view details