திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் காவல் துறையினர் இரவு பகலாக வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (பிப்.18) மாலை ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து சென்னை சென்ற பேருந்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பையை பரிசோதனை செய்ததில், நான்கு பொட்டலங்கள் அடங்கிய 10 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பேருந்தில் பயணித்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பீனுல்ஹேக் (26) என்ற இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், நெல்லூரிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:போலீஸுக்கே லந்து கொடுத்த போதை ஆசாமி !