திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதிக்குட்பட்ட கோளூர் கிராமத்தில் சட்டவிரோதமாகவும், கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறியும், மது விற்பனை நடந்து வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
சட்ட விரோதமாக மது விற்ற நபர் கைது: மதுபாட்டில்கள் பறிமுதல்! - Thiruvallur district crime news
கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறி, மது விற்பனை செய்த நபரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 7 பெட்டிகள் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மது விற்பனை செய்தவர் கைது
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கும்மிடிப்பூண்டி சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 7 பெட்டிகள் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.