திருவள்ளூர் மாவட்டம், ஆரணி எஸ்.பி.கோயில் தெருவில் வசிக்கும் பாபு-விஜயலஷ்மி தம்பதியினரின் வீட்டுக்குள் புகுந்த, கட்டு விரியன் பாம்பு அவர்களது இரண்டு மகன்களான ரமேஷ்(13), தேவராஜ்(12) ஆகியோரைக் கடித்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தங்களைக் கடித்த கட்டுவிரியன் பாம்புடன் சிகிச்சைக்கு வந்து, மருத்துவமனையில் சேர்ந்துகொண்டனர்.
கட்டுவிரியன் பாம்பு கடித்து 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு - கடித்த கட்டு விரியன் பாம்புடன் சிகிச்சைக்கு
திருவள்ளூர் அருகே கடித்த கட்டு விரியன் பாம்புடன் சிகிச்சைக்கு வந்த சகோதரர்களில் அண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
Etv Bharat
இந்நிலையில், சிறுவன் ரமேஷ் பரிதாபமாக சிகிச்சைப் பலனின்றி இன்று (அக்.5) உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது தம்பி தேவராஜுக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சை பெற வந்த பெண் - மருத்துவர்கள் அதிர்ச்சி