கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபான கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சென்னையைச் சுற்றியுள்ள, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் தளர்வுகளுடன் மதுபான கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதனால் சென்னையில் வசிக்கும் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர், இந்தப் பகுதிகளில் இருந்து மது பானங்களை வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்றுவந்தனர். இதில் சிலர் காவல்துறையினரிடம் வசமாகவும் பிடிபட்டனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு சிலர் மது பாட்டில்களை கடத்திச்செல்வதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.