கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி, பள்ளிகள் திறக்கப்படாததால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி நீண்ட நாள்களாகப் பூட்டப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு - திருவள்ளூர் செய்திகள்
திருவள்ளூர்: வல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகள், உபகரணங்கள் திருடுபோயின.
laptop
இந்நிலையில், நேற்று (அக். 20) மதியம் இப்பள்ளியிலிருந்து மடிக்கணினிகள், உபகரணங்கள் காணாமல்போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.