கரோனா ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.