தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் 50 டன் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு - அமைச்சர் சா.மு.நாசர்

தீபாவளி பண்டிகைக்கு ஆவினில் 50 டன் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

அமைச்சர் சா.மு.நாசர்
அமைச்சர் சா.மு.நாசர்

By

Published : Oct 22, 2021, 10:25 PM IST

திருவள்ளூர்:கச்சூர் பகுதியில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

57 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, வீடு கட்டுவதற்கான ஆணையை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று (அக்.22) வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் , "விரைவில் ஆவினில் ஆட்டு பால் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் நெய்யால் செய்யப்பட்ட இனிப்பு, கிலோ 425 ரூபாய்க்கு விற்கப்படும்.

கடந்த ஆட்சியில் தீபாவளி பண்டிகை அன்று ஆவினில் 18 டன் இனிப்பு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 50 டன் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.

அமைச்சர் சா.மு.நாசர்

நல திட்ட உதவிகளைப் பெற்ற மாற்றுத்திறனாளி பயனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் தாங்கள் சுய தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: அதிமுக பெண் உறுப்பினரின் சேலையை உருவிய திமுக பிரமுகர்? தேர்தல் நிறுத்தப்பட்டதால் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details