திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வெங்காய மூட்டைகள் ஏற்றி வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.
செங்குன்றம் அருகே 42 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது! - காவல்துறை விசாரணை
திருவள்ளூர்: செங்குன்றம் அருகே வெங்காய மூட்டைகளுக்கு இடையில் கடத்தி வரப்பட்ட 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரை கைது செய்தனர்.
42kg of ganja seized near Chengdu, two arrested
காவல் துறையின் சோதனையில், வெங்காய மூட்டைகளுக்கு இடையில் 42 கிலோ அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ஞானராஜ், புருஷோத்தமன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
பின் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், கைதான இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.