தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடுகளின் பூட்டை உடைத்து 42 சவரன் நகைகள் கொள்ளை!

திருவள்ளூர்: திருவள்ளூர், மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் இரு வீடுகளின் பூட்டை உடைத்து 42 சவரன் நகைகள், ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

trivallur

By

Published : Aug 23, 2019, 4:28 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் வசித்துவருபவர் ஜெயக்குமார்(47). இவரது மனைவி செல்வி(42). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தம்பதியினர் வேலைக்குச் சென்றனர். பின்னர், மாலை வீடு திரும்பியபோது மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 26 சவரன் நகை, ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் திருவள்ளூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை
இதேபோல், மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொடுகாடு கிராமத்தில் வசிக்கும் யுவராஜ் என்பவரது வீட்டிலும் நேற்று 16 சவரன் தங்க நகைகள், ரூ. 7,000 பணம், 32 இன்ச் எல்.ஈ.டி டிவியும் கொள்ளையடிக்கப்பட்டன.
இது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details